​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2020ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள்

Published : May 24, 2019 6:34 PM

2020ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள்

May 24, 2019 6:34 PM

2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரயிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவசமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப்புக்கு நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருமானம் ஈட்ட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரவிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் வர்த்தக மாநாட்டில் இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், முதல்கட்டமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வருவது போல வாட்ஸ்ஆப் ஸ்டோரிகளுக்கு இடையே லிங்குடன் விளம்பரம் செய்யும் வசதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.