​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உ.பி., ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

Published : May 24, 2019 6:15 PM

உ.பி., ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

May 24, 2019 6:15 PM

மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலியாக, ஒடிசா, உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மக்களவை தேர்தலில், பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.  ஒடிசாவில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தது. இங்கு பிஜு ஜனதாதளம் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதேபோல் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வி அடைந்த அமேதி தொகுதி பொறுப்பாளர் யோகேந்திர மிஷ்ரா, கர்நாடக மாநில பிரச்சாரகுழு தலைவர் பட்டீல் ஆகியோரும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தங்களது ராஜினாமா கடித்தத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளனர்.