​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுகவின் வெற்றி முதலை கையில் கிடைத்த தேங்காய் - ஜெயக்குமார்

Published : May 24, 2019 1:13 PM

திமுகவின் வெற்றி முதலை கையில் கிடைத்த தேங்காய் - ஜெயக்குமார்

May 24, 2019 1:13 PM

திமுகவின் தவறான பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட்டுவிட்டதுதான் மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

சி.பா. ஆதித்தனாரின் 38ஆவது நினைவு நாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மா.பா.பாண்டியரஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, அதிமுக அரசு தொடர தமிழக மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகரமாக பார்ப்பதாகக் கூறினார்.

பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து டிடிவி தினகரன் படுதோல்வியை சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் வாக்காளர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத நபராக தினகரன் நிலை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

திமுகவின் வெற்றியைப் பொறுத்தவரை, அது முதலையின் வாயில் சிக்கிய தேங்காய் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.