​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
9 பேர் குடும்பத்தில் இருந்தும் வெறும் 5 வாக்குகள் பெற்ற வேட்பாளர் கண்ணீர்

Published : May 24, 2019 12:52 PM

9 பேர் குடும்பத்தில் இருந்தும் வெறும் 5 வாக்குகள் பெற்ற வேட்பாளர் கண்ணீர்

May 24, 2019 12:52 PM

பஞ்சாப்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தனது குடும்பத்தில் 9 பேர் இருந்தும் தனக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாக கூறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் நீத்து ஷுட்டெர்ன் வாலா ((Neetu Shuttern Wala)). பொது தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அவர் வெறும் 5 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வாலா, தனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மொத்தமே 5 வாக்குகள் மட்டும் தான் கிடைத்துள்ளது என்றும் கூறி பேசும் போதே அழத் தொடங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.