​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு

Published : May 24, 2019 11:43 AM

குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு

May 24, 2019 11:43 AM

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திட்டக்குடி அடுத்த அருகேரியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களில் கொண்டு செல்லப்படும் தண்ணீர் மூலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனை அதிகாரிகள் கவனம் கொண்டு சரிசெய்ய வேண்டும் என குடிநீர் பற்றாக்குறையால் அல்லல்பட்டு வரும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.