​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனடாவில் பயங்கர காட்டுத் தீ

Published : May 24, 2019 11:33 AM

கனடாவில் பயங்கர காட்டுத் தீ

May 24, 2019 11:33 AM

கனடாவில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவின் அல்பெர்டா((Alberta)) மாகாணத்தில், வனப்பகுதியில் கடந்த இரு தினங்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. சுமார் 97,000 ஹெக்டேர் பரப்பளவில் தீ கொளுந்துவிட்டு எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்து வரும் நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் 300க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ மேலும் பரவ வாய்ப்புள்ளதால், 5000க்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.