​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி

Published : May 24, 2019 11:31 AM

எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி

May 24, 2019 11:31 AM

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் உடனிருந்தார். மேலும் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, அத்வானியை போன்ற சிறந்தவர்களால் தான் பாஜக வெற்றிப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியையும், நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.