​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

Published : May 24, 2019 8:03 AM

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

May 24, 2019 8:03 AM

பிரதமர் மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அமெரிக்க- இந்திய உறவில் மகத்தான ஒத்துழைப்பு ஏற்படும் என்றும்  டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் வாழ்த்துக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த வெற்றி 130 கோடி இந்திய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் நட்பை மேம்படுத்தவும் உலக அமைதிக்காக ஒன்றுபட்டு செயல்படவும் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.