​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் வெற்றி விவரம்

Published : May 23, 2019 5:28 PM

மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் வெற்றி விவரம்

May 23, 2019 5:28 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கு தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் தவிர 19 தொகுதிகளில் களம் கண்டனர்.

இதில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜைவிட 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் 5 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் ஜெயவர்தனை தோல்வியடையச் செய்தார்.

மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 4 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகளுடன் பா.ம.க.வின் சாம்பாலை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் அவருக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 750 வாக்குகள் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் களம் இறங்கிய அ.தி.மு.க.வின் மரகதம் குமரவேல் தோல்வியைத் தழுவினார்.

அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க.வின் ஏ.கே.மூர்த்தியை விட 3 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று மக்களவைக்கு தேர்வாகி உள்ளார்.

தருமபுரி தொகுதியில் இருந்து செந்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அன்புமணியைவிட 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 719 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க.வின் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தோல்வியுறச் செய்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷைவிட அவர் 3 லட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் அதிகம்பெற்றார்.

 

சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஒரு லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனைவிட 2 லட்சத்து 3 ஆயிரத்து 814 வாக்குகள் அவர் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி தொகுதியில் இருந்து தி.மு.க.வேட்பாளர் சண்முக சுந்தரம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி 7 லட்சத்து 43 ஆயிரத்து 813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்து தோல்வியடைந்தார்.

கடலூர் தொகுதியில் ஸ்ரீரமேஷ், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமியைவிட ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 966 வாக்குகள் அதிகம்பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி தோல்வியடைந்தார். தி.மு.க. வேட்பாளரான செ.ராமலிங்கம் அவரைவிட 2 லட்சத்து 58 ஆயிரத்து 398 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் 5 லட்சத்து 83 ஆயிரத்து 621 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் நடராஜனை தோல்வியடையச் செய்தார்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி 5 லட்சத்து 60 ஆயிரத்து 345 வாக்குகள் பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை சவுந்தர்ராஜனை 3 லட்சத்து 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் களம் இறங்கிய புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 130 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

 

நெல்லை தொகுதியில் ஞானதிரவியம் 5 லட்சத்து 17 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் 9 வேட்பாளர்கள் களம் கண்டனர். சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 5 லட்சத்து 64 ஆயிரத்து 2 வாக்குகள் பெற்று, பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவைத் தோல்வியடையச் செய்தார்.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 6 லட்சத்து 15 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தேமுதிக வேட்பாளர் இளங்கோவனைவிட 4 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

தேனி தொகுதியில் அ.தி.மு.க.வின் ரவீந்திரநாத்குமார் 4 லட்சத்து 90 ஆயிரத்து 824தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 4 லட்சத்து 18 ஆயிரத்து 327 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 6 லட்சத்து 91 ஆயிரத்து 518 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரையைவிட 4 லட்சத்து 17 ஆயிரத்து 63 வாக்குகள் அவர் அதிகம்பெற்றார்.

கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் மக்களவைக்கு தேர்வாகி உள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 4 லட்சத்து 64 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி இத்தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

 

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயகுமார், அதிமுக வேட்பாளர் வேணுகோபாலைவிட 3 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம்பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியைவிட அவர் ஒரு லட்சத்து 56 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத் 6 லட்சத்து 13 ஆயிரத்து 390 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏழுமலையை அவர் தோற்கடித்தார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் களம் இறங்கினர்.

சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரைவிட 3 ஆயிரத்து 219 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார், 5 லட்சத்து 56 ஆயிரத்து 675 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாமக வேட்பாளர் வடிவேல்ராவணன் தோல்வியடைந்தார்.

நாமக்கல் தொகுதியில், கொ.ம.தே.க. வேட்பாளரான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சின்ராஜ் 6 லட்சத்து 23 ஆயிரத்து 370 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அ.தி.மு.க.வின் காளியப்பனுக்கு 3 லட்சத்து 60 ஆயிரத்து 541 வாக்குகள் கிடைத்தது.

ராமநாதபுரம் தொகுதியில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி, வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை அவர் தோல்வியடையச் செய்தார்.

மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனைவிட சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன் 5 லட்சத்து 67 ஆயிரத்து 741 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார்.

திருப்பூர் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 5 லட்சத்து 5 ஆயிரத்து 793 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை அவர் தோல்வியுறச் செய்தார்.

நாகை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜ் 5 லட்சத்து 19 ஆயிரத்து 596 வாக்குகள் பெற்ற நிலையில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் தொகுதியில், திமுக கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 6 லட்சத்து 77 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். என்.ஆர்.சிவபதியை விட அவர் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார்.

ஈரோடு தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 5 லட்சத்து 58 ஆயிரத்து 929 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் மணிமாறன் தோல்வியடைந்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். 4 லட்சத்து 44 ஆயிரத்து 646 பெற்ற அவர் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை சுமார் ஒருலட்சத்து 97ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.