​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன நிறுவனங்களை குறி வைத்து தாக்கும் அமெரிக்கா

Published : May 22, 2019 6:45 PM

சீன நிறுவனங்களை குறி வைத்து தாக்கும் அமெரிக்கா

May 22, 2019 6:45 PM

கண்காணிப்பு வீடியோ கருவிகளை விற்பனை செய்து வரும் சீன நிறுவனம், அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு தடை விதிக்க டிரம்ப் அரசு பரிசிலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. ஏற்கனவே சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹுவேய், அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதற்கு கடந்த வாரம் டிரம்ப் அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் கண்காணிப்பு வீடியோ கருவிகளை விற்பனை செய்யும் சீனாவின் ஹிக்விசன் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஹிக்விசன் நிறுவனம், அமெரிக்கா தடை விதித்தால்  வேறு நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொள்ள முடியும் என்று கூறியுள்ளது.