​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மார்க்கெட்டில் உள்ள மாம்பழக் கடைகளில் சோதனை

Published : May 22, 2019 7:16 AM

மார்க்கெட்டில் உள்ள மாம்பழக் கடைகளில் சோதனை

May 22, 2019 7:16 AM

விழுப்புரம் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில், ரசாயன கற்கள் போட்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் விழுப்புரத்தில் உள்ள மாம்பழ விற்பனைக் கடைகளிலும் குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஒரு டன் மாம்பழங்களுடன் 5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.