​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியாவில் தோன்றிய பிரகாச எரி கல்

Published : May 21, 2019 6:21 PM

ஆஸ்திரேலியாவில் தோன்றிய பிரகாச எரி கல்

May 21, 2019 6:21 PM

ஆஸ்திரேலியாவில், விண்ணிலிருந்து எரி கல் ஒன்று விழுந்ததாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாண பகுதி ஒன்றில் ஏற்பட்ட இந்நிகழ்வில், வித்தியாசமான சத்தத்துடனும், அதிக பிரகாசத்துடனும் எரிகல் ஒன்று வேகமாக தரையிறங்குவது போல பதிவாகியுள்ளது.

நீலம், பச்சை நிறம் கலந்து நள்ளிரவில் தோன்றிய விண்கல்லின் ஒளியானது பகல் நேர வெளிச்சம் போல பிரகாசமாக இருந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் இந்த கல் எங்கு விழுந்தது எனும் விபரம் அறியப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.