​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எதிர்க்கட்சிகளின் இறுதிக்கட்ட போராட்டம்..!

Published : May 21, 2019 6:17 PM

எதிர்க்கட்சிகளின் இறுதிக்கட்ட போராட்டம்..!

May 21, 2019 6:17 PM

ப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, பின்னர், வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என, 22 எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியிருக்கின்றன. 

வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு ஐயங்களை எழுப்பி வருகின்றன. இதுகுறித்து, டெல்லியில், உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப்பில், பிற்பகலில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தின.

இதையடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில், 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவினை, காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட 19 கட்சிகளின் தலைவர்கள், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்குச் சென்று, தேர்தல் ஆணையர்களிடம் வழங்கினர்.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்றும், பிரச்சினைகள் நடந்த வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளையும், ஒப்புகைச்சீட்டுகளோடு ஒப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனு அளித்த பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக பெண் எம்.பி கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வாக்கு எண்ணிக்கையின், இறுதிச்சுற்றில், ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதாக, தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது எனக் கூறின.

புதன்கிழமை நடைபெறும், தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து முக்கிய கருத்தாக கொண்டு விவாதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்திருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கூறியிருக்கின்றனர்.