​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Published : May 21, 2019 5:53 PM

தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

May 21, 2019 5:53 PM

தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தனது கருத்து ஏற்கப்படாததால், ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதன் மூலம் தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தெரிய வந்ததை அடுத்து சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அசோக் லவாசா பங்கேற்றார்.

அதில், தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.