​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

Published : May 21, 2019 4:57 PM

ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

May 21, 2019 4:57 PM

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சங்ககிரியில் மளிகை கடை நடத்தி வரும் அப்துல் என்பவர் கொங்கணாபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மளிகை பொருட்களை வைக்கும் கிடங்காக பயன்படுத்தி வருகிறார்.இங்கு குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சங்ககிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு சென்று சோதனை செய்த போது 197 மூட்டைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அப்துலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.