​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கட்டண தள்ளுபடி சலுகைக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் மீது புகார்

Published : May 21, 2019 4:47 PM

கட்டண தள்ளுபடி சலுகைக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் மீது புகார்

May 21, 2019 4:47 PM

கார் வினியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டண தள்ளுபடி சலுகை வழங்க கட்டுப்பாடு விதித்த புகார் தொடர்பாக மாருதி சுசுகி நிறுவனம் மீது இந்திய போட்டித் திறன் ஆணையம் விசாரணை நடத்துகிறது.

இந்தியாவில் கார்கள் சந்தையில் சுமார் 51 சதவீதத்தை மாருதி நிறுவனம் தன் வசம் வைத்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு மட்டுமே தள்ளுபடி சலுகை வழங்க வேண்டும் என்று மாருநி நிறுவனம் அதன் வினியோகஸ்தர்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய போட்டித்திறன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மாருதி சுசுகி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே போன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ஹுண்டாய் நிறுவனத்திற்கு 2017 ஆம் ஆண்டு சுமார் 87 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.