​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
11 வயது வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை

Published : May 21, 2019 4:44 PM

11 வயது வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை

May 21, 2019 4:44 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு நோயாளியுடன் வந்த 11 வயது வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவமனை காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பத்மாவதி என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்ட சுபின் என்பவன் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளான். திங்கட்கிழமையன்று வடமாநில தம்பதி தங்களது 11 வயது மகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அந்த சிறுமியிடம் சுபின் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

இதுகுறித்து புகாரளிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவான சுபினை போலீசார் தேடி வருகின்றனர். சுபின் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் குற்றப்பின்னணி இல்லாத நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.