​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - எம்.எல்.ஏ உட்பட 7 பேர் பலி

Published : May 21, 2019 4:07 PM

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - எம்.எல்.ஏ உட்பட 7 பேர் பலி

May 21, 2019 4:07 PM

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர் பலியாகியுள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தின் டிரப் மாவட்டத்திலுள்ள போகாப்பானி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தேசிய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரோங் அபோக் ((Tirong Aboh)) பலியானார்.

மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை மேகாலயா மாநில முதலமைச்சரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான சங்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு நாகாலாந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.