​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கூடுதல் காவல் ஆணையர் ஆய்வு

Published : May 21, 2019 2:27 PM

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கூடுதல் காவல் ஆணையர் ஆய்வு

May 21, 2019 2:27 PM

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து, வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்த ஆணையர், மேலும் எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய தேவை உள்ளது என்பது குறித்தும், தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.