​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தியதாக பிரணாப் முகர்ஜி பாராட்டு

Published : May 21, 2019 1:39 PM

மக்களவை தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தியதாக பிரணாப் முகர்ஜி பாராட்டு

May 21, 2019 1:39 PM

மக்களவை தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தியதாக தேர்தல் ஆணையத்திற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு சாதகமாக, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் புகார் கூறிவருகின்றன. அதிலும் பிரதமர் மோடியிடம் தேர்தல் ஆணையம் முற்றிலும் சரணடைந்துவிட்டதாக, ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தியிருப்பதாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டியுள்ளார்.

டெல்லியில், (("Defining India Through Their Eyes" என்ற)) நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்றால், முதலில் அவை நாட்டுக்கு மிகச் சிறப்பாக சேவையாற்றுகின்றன என்பதை மனதில் இருத்த வேண்டும் என்றார். ஜனநாயம் வெற்றியடைந்திருக்கிறது என்றால், இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் தொடங்கி, இன்றைய தேர்தல் ஆணையர்கள் வரை தேர்தலை சிறப்பாக நடத்தியதே அதற்குக் காரணம் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.