​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

Published : May 21, 2019 11:39 AM

காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

May 21, 2019 11:39 AM

கரூர் அருகே காதல் விவகாரத்தில் நபர் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தில், வழக்கறிஞர் மற்றும் அவரது சகோதரரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கம்மநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பிச்சைமுத்து என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இருவீட்டார் இடையே சச்சரவு நிலவி வந்தது. இந்நிலையில் நேற்றிரவு பரமசிவம் வீட்டிற்கு வந்து  பிச்சைமுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் பிச்சை முத்துவின் சகோதரர் முருகானந்தம் பரமசிவத்தை அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது.

அவர்களை தடுக்க முயன்ற பரமசிவத்தின் தந்தை மணிவண்ணனையும் தாக்கியுள்ளனர். வெட்டப்பட்டதில் காயமடைந்த பரமசிவம் மற்றும் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த மணிவண்ணன், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் உயிரிழந்தார்.  இதையடுத்து தலைமறைவான பிச்சைமுத்து, முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.