​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக - கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தை

Published : May 21, 2019 9:46 AM

தமிழக - கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தை

May 21, 2019 9:46 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

தமிழக - கர்நாடக எல்லையில் தாளவாடியை அடுத்து உள்ளது ஒண்ணள்ளி கிராமம். இந்த கிராமத்தை  ஒட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கிராமத்தில் உள்ள தோட்டங்களில் சுற்றித் திரிந்தது

சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த சிறுத்தை மைசூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.