​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

Published : May 20, 2019 4:32 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

May 20, 2019 4:32 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குண்டர்சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக மணிவண்ணன் என்பவனும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளான்.

வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், கடந்த 14 ஆம் தேதி சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மற்றொரு குற்றவாளியான சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.