​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமல் முன்ஜாமீன்- தீர்ப்பு ஒத்திவைப்பு

Published : May 20, 2019 7:15 AM

கமல் முன்ஜாமீன்- தீர்ப்பு ஒத்திவைப்பு

May 20, 2019 7:15 AM

சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கமலஹாசன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பாக வந்தது.

அப்போது, கமலின் பிரச்சார வீடியோவை பார்த்த நீதிபதி, கோட்சேவிற்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினார். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சியினரும், ஊடகங்களும் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தினார். இந்த வழக்கில் சனிக்கிழமைக்குள்ளாக தீர்ப்பு வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.