​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அணை நீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மத்திய அரசு

Published : May 19, 2019 9:15 PM

அணை நீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மத்திய அரசு

May 19, 2019 9:15 PM

அணைகள் வறண்டுள்ளதால், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்கள் அணை நீரை, குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்க மத்திய நீர் ஆணைய உறுப்பினர் எஸ் கே ஹல்தார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தண்ணீரை சாதுர்யமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அணைகள் நிரம்பும் வரை தண்ணீரை குடிப்பதற்கு மட்டும்பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
6 மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் சராசரியா 22 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நீர் அளவின் சராசரியை விட குறைவு.