​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம்

Published : May 19, 2019 7:11 AM

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம்

May 19, 2019 7:11 AM

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கருட சேவை உற்சவத்தையொட்டி திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இக்கோவிலின் வைகாசி பிரமோற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினார். வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா,கோவிந்தா என முழக்கமிட்டனர்.

101 பஜனை கோஷ்டிகள் பின்தொடர, வேத மந்திரங்கள் ஒலிக்க, பெருமாள் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.