​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கும்பகோணம் ஐங்கரன் காபி பெயரில் உரிமம் பெறாதோர் உணவகம் நடத்த தடை

Published : May 18, 2019 6:48 PM

கும்பகோணம் ஐங்கரன் காபி பெயரில் உரிமம் பெறாதோர் உணவகம் நடத்த தடை

May 18, 2019 6:48 PM

கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் என்ற பெயரில், உரிமையாளரை தவிர பிறர் உணவகம் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கும்பகோணம் ஐங்கரன் காபி என்பது தங்களது வர்த்தக முத்திரை என்றும், காப்புரிமை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் நிறுவன பெயரில் உணவகம் நடத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோடு, வடக்கு தெரு ஆகியவற்றில் கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார்.