​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதாக அமேசான் மீது புகார்

Published : May 18, 2019 6:46 PM

இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதாக அமேசான் மீது புகார்

May 18, 2019 6:46 PM

இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் பொருட்களை விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம், மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட பன்நாட்டு இணைய வணிக நிறுவனமான ‘அமேசான்’ இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் இந்து மத கடவுள்களின் ஸ்டிக்கர்களை டாய்லட் பேப்பர்கள், டாய்லட் மூடிகள், கால்மிதிகள் ஆகியவற்றில் ஒட்டி விற்பனைக்கென புகைப்படத்துடன் வெளியிட்டது.இதுகுறித்து நொய்டாவைச் சேர்ந்த விகாஸ் மிஷ்ரா என்பவர் அமேசான் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


அமேசான் நிறுவனம் மீது மத உணர்வை புண்படுத்துவது தொடர்பான பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அமேசான் நிறுவனத்தை கண்டித்து ‘#BoycottAmazon' எனும் ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது.