​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
59 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கு தீவிர ஏற்பாடு....

Published : May 18, 2019 5:52 PM

59 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கு தீவிர ஏற்பாடு....

May 18, 2019 5:52 PM

நாடாளுமன்றத்துக்கு இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஞாயிறுக்கிழமை அன்று  ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறுகிறது.

இறுதிக் கட்டமாக பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், சண்டிகர் உள்ளிட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஞாற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கும் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஓட்டுப்பதிவுக்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்ருகன்சின்கா, ரவிசங்கர்பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் ஞாயிறு அன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. முதல் 6 கட்ட தேர்தல் மூலம் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

ஞாயிறு அன்று 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெறும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.