​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

Published : May 18, 2019 4:40 PM

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

May 18, 2019 4:40 PM

மிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலுள்ள கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

அறுபடை வீடுகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகப் பூஜைகளுடன் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபலசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கோவில் யானை செங்கம்மா முன்னே வர, பின்னே தங்க கருட வாகனத்தில் வந்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ராமாபுரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின்னர் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஒரு பகுதியாக அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் நகரில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.