​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலியான பரிதாபம்

Published : May 18, 2019 4:25 PM

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலியான பரிதாபம்

May 18, 2019 4:25 PM

சென்னை அயனாவரத்தில் தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி என்ற 10 வயதுச் சிறுமி, கோடை விடுமுறையைக் கொண்டாட அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அச்சிறுமியின் அத்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை மருத்துவமனையில் அனுமதித்து உடன் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று, வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்று விட அஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்து ஜானகியின் கணவர் வினோத் குமார் வீடு திரும்பிய போது, தொட்டில் கட்டப்பட்ட சேலையில் கழுத்து இறுக்கி அஸ்வதி இறந்து கிடந்தார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.