​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published : May 18, 2019 1:45 PM

வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

May 18, 2019 1:45 PM

டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் இறுதியாண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ரிஷி ஜோஸ்வா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாகவும், வெளிமாநிலங்களில் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக விஷம பிரச்சாரம் நடைபெறுகின்ற நேரத்தில், தமிழக மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திட வேண்டியது மிக முக்கியமாகும் எனவும் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.