​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகைச்சுவையாக சொன்னால் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் வேண்டும் - ஜெயக்குமார்

Published : May 18, 2019 1:44 PM

நகைச்சுவையாக சொன்னால் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் வேண்டும் - ஜெயக்குமார்

May 18, 2019 1:44 PM

நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையர்கள் இடையேயான கருத்துவேறுபாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் ஆணைய உள் விவகாரங்களில் அரசியல் கட்சிகள் கருத்துக்கூற முடியாது என்றார்.

கமலஹாசன் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை நம்பி இருக்க வேண்டுமே தவிர மதங்களை நம்பி இருக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். கமலஹாசன் வரலாற்றாசிரியராக மாறியிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.