​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்தில் 35 சவரன் நகைப் பை அபேஸ்

Published : May 18, 2019 5:08 AM

அரசு பேருந்தில் 35 சவரன் நகைப் பை அபேஸ்

May 18, 2019 5:08 AM

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்தில் ஆந்திர தம்பதியின் நகை பையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன், தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி பிரசில்லாவுடன் உறவினர் திருமணத்திற்கு கடலூர் செல்ல கோயம்பேடு வந்தடைந்தார். அங்கிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் ஏறி இருக்கைக்கு மேலே நகை உள்ள பையை வைத்துள்ளனர்.

மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே பார்த்த போது நகை இருந்த பை காணவில்லை என கூச்சலிட்ட அவர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 35 சவரன் நகையும், 19 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டிருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.