​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு

Published : May 17, 2019 6:44 AM

முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு

May 17, 2019 6:44 AM

கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புடைய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது. ராஜீவ் குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய மிகப்பெரிய அதிகார பலம் கொண்ட சிலரை காப்பதற்காக ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ராஜீவ் குமாரை துன்புறுத்துவதற்காகவே சிபிஐ காவலில் எடுக்க அனுமதி கோருவதாக ராஜீவ் குமாரின் வழக்கறிஞர் பலத்த ஆட்சேபம் எழுப்பியுள்ளார்.