கோடையின் தகிப்பு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் - அறிவியல் நிபுணர்கள் கருத்து
Published : May 17, 2019 6:39 AM
கோடையின் தகிப்பு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் - அறிவியல் நிபுணர்கள் கருத்து
May 17, 2019 6:39 AM
கோடையின் தகிக்கும் வெப்பம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று ஹைதராபாத்தை சேர்ந்த அறிவியல் நிபுணர் டி.நாகரத்தினா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களிலும் கிழக்கத்திய மாநிலங்களிலும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருப்பதாகவும் இந்நிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் வெயில் 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை கொளுத்துகிறது. இதனிடையே வெயில் தாக்கத்தால், 38 வயதான ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவர் கடந்த 14ம் தேதி சுற்றுலா விசாவுடன் ஹைதராபாத் வந்தார்.