​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஆறு பேர் சுட்டுக் கொலை

Published : May 16, 2019 9:21 PM

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஆறு பேர் சுட்டுக் கொலை

May 16, 2019 9:21 PM

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் தலிபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட, பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்தது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்தனர்.

இதே போன்று சோபியானில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் முயன்ற போது துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.