​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்கா, வடகொரிய அதிபர் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

Published : May 16, 2019 7:21 PM

அமெரிக்கா, வடகொரிய அதிபர் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

May 16, 2019 7:21 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் வடகொரிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரிலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் வியட்நாமிலும் சந்தித்து பேசினர். இரு பேச்சுவார்த்தைகளிலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜூன் மாதம் வடகொரிய அதிபரை கிம் ஜாவ் உன்னை சந்திக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபரின் அலுவலம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை எந்த நாட்டில், எந்த இடத்தில் நடைபெறும் என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை.