​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்த இந்திய ராணுவ ஊழியர் கைது

Published : May 16, 2019 7:21 PM

பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்த இந்திய ராணுவ ஊழியர் கைது

May 16, 2019 7:21 PM

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய ராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் மாவ் நகரில் உள்ள ராணுவ துப்பாக்கி படை பிரிவு அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றிய ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையதளத்தில் அறிமுகமாக பாகிஸ்தான் பெண்ணுடன், அவர் நெருக்கமாக பழகியதும், இந்த பெண்ணின் பெயரில் பாகிஸ்தானின் உளவுத்துறை, குமாஸ்தாவை தொடர்பு கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண் மீதான மயக்கத்தில், தனது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்தே அந்த குமாஸ்தா, இணையம் மூலம் தகவல்களை பரிமாறியதும், இதன் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை, குமாஸ்தாவின் கம்ப்யூட்டரில் ஊடுருவி ரகசிய தகவல்களை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.