​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை

Published : May 16, 2019 7:00 PM

தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை

May 16, 2019 7:00 PM

மத்திய கிழக்கு நாடுகளில் எழுந்திருக்கும் அசாதாரண சூழலால், கச்சா எண்ணெய் உற்பத்தி, கடுமையாக சரிந்திருப்பதோடு, பன்னாட்டளவில் அதன் விலையும் அதிகரித்து வருகிறது.

அடுத்தடுத்த பொருளாதார தடைகளை சந்தித்துள்ள ஈரான், போர் பதற்றத்திற்கு ஆட்பட்டிருக்கும் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில், அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் தடையால், அங்கிருந்து நடைபெற்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது.

கிராக்கி இருந்தாலும், அதை சமாளிக்க போதுமான கச்சா எண்ணெய் வளம் இன்றி பல உற்பத்தி நாடுகளும் உள்ளன. அமெரிக்காவும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை, கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற்கொள்கிறது. இதுபோன்ற காரணிகளால், பன்னாட்டளவில், கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து, மூன்றாவது முறையாக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையே, நடப்பாண்டில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கச்சா எண்ணெய் தேவையை விட மேலும் அதிகரிக்க கூடும் என OPEC எச்சரித்திருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.