​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜூன் 8 ஆம் தேதி நடைபெற இருந்த பி.எட்.தேர்வு 13 ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றம்

Published : May 16, 2019 6:03 PM

ஜூன் 8 ஆம் தேதி நடைபெற இருந்த பி.எட்.தேர்வு 13 ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றம்

May 16, 2019 6:03 PM

ஜூன் 8ல் நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதே தேதியில் பி.எட். தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டெட் தேர்வை பி.எட் இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களும் எழுதுவதற்கு தகுதி உடையவர்கள்.

இந்நிலையில், பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் மொழித்தாள் தேர்வானது, டெட் தேர்வு நடைபெறும் தேதியில் நடைபெற இருந்ததால், பி.எட் தேர்வு எழுதுவதா அல்லது டெட் தேர்வை எழுதுவதா என பி.எட் மாணவர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்பட்டது. 

எனவே, தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதிக்கு பி.எட் தேர்வை மாற்றி உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டுள்ளார்.