​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
200 ஆண்டுகால பாரம்பரியத்தை பிரதமரால் திருப்பித் தரமுடியுமா?: மம்தா

Published : May 16, 2019 5:53 PM

200 ஆண்டுகால பாரம்பரியத்தை பிரதமரால் திருப்பித் தரமுடியுமா?: மம்தா

May 16, 2019 5:53 PM

சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை, பிரதமரால் திருப்பித்தர முடியுமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


சவுத் 24 பார்கானாஸ் மாவட்டத்தின் மதுராபூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர்,
பிரதமர் மோடியின் பரப்புரை பாதிக்காத வகையில், மற்றவர்களின் பரப்புரை கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதன் மூலம், பாஜகவின் உடன்பிறந்த சகோதரர் போல், தேர்தல் ஆணையம் மாறியிருப்பதாக, சாடியிருக்கிறார்.

கொல்கத்தா வன்முறையை திரிணமுல் காங்கிரஸ் தான் நிகழ்த்தியது என மான-அவமானம் பாராது குற்றம்சாட்டுவோர், அதை நிரூபிக்க தவறினால், சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என மம்தா பானர்ஜி எச்சரித்திருக்கிறார். திரிணமுல் காங்கிரஸ் மீதும், மேற்குவங்க அரசு மீதும் தேவையின்றி பொய்களை கூறி கொண்டிருந்தால், பிரதமர் நரேந்திர மோடி, கணக்கு வழக்கின்றி தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கும் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.