​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுகவுக்கு சாதகமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருத்தம் என புகார்

Published : May 16, 2019 5:16 PM

அதிமுகவுக்கு சாதகமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருத்தம் என புகார்

May 16, 2019 5:16 PM

தேனியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிமுகவுக்கு சாதகமாக திருத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனியில் 19ஆம் தேதி மறுவாக்குபதிவு நடக்கப்படவிருக்கும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தலைவர் கோப்பண்ணா புகார் அளித்துள்ளார்.

மேலும், தேனி தொகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 70 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச்சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.