​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவிரவாதிகளை கொன்றழித்தவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்

Published : May 16, 2019 4:25 PM

தீவிரவாதிகளை கொன்றழித்தவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்

May 16, 2019 4:25 PM

தீவிரவாதிகளை கொன்றழித்தவர்கள் யார்?., தங்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவேத் தெரியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். கொல்கத்தா வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட மாமனிதர் வித்யாசாகரின் சிலை அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். 

உத்தரப்பிரதேசத்தின் மாவ்((Mau)), சந்தாவ்லி((Chandauli)), மிர்ஷாபூரிலும்((Mirzapur)), மேற்குவங்க மாநிலத்தின் மதுராபூர்((Mathurapur)), மற்றும் டம் டம்((Dum Dum)) நகரிலும் என, ஒரே நாளில் ஐந்து இடங்களில், பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார்.

கொல்கத்தாவில், பாஜக பேரணியின்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால், திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டதாக, பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேற்குவங்க மக்களால் கொண்டாடப்படும் தலைவராக விளங்கும் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகவும், அதே இடத்தில், மீண்டும், வித்யாசாகரின் சிலை நிறுவப்படும் என்றும், பிரதமர் உறுதியளித்தார்.

கடந்த மாதம் வரை, தன்னை அகற்றியே தீருவதுதான் குறிக்கோள் என முழங்கிய கலப்பட கூட்டணியினர், நாளுக்கு, நாள், பாஜகவிற்கான ஆதரவு பெருகிவருவதை கண்டு, கலக்கமடைந்திருப்பதாக, பிரதமர் மோடி சாடினார்.

வெறும் 8 இடங்கள், 10 இடங்கள், 20-22 இடங்கள், 35 இடங்களை வைத்திருப்போர் எல்லாம், பிரதமராக துடித்துக் கொண்டிருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தீவிரவாதிகளை கொன்றழித்தவர்கள் யார்?., தங்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவேத் தெரியும் என பிரதமர் கூறியிருக்கிறார்.