​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போபர்ஸ் வழக்கில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்ற சிபிஐ

Published : May 16, 2019 4:17 PM

போபர்ஸ் வழக்கில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்ற சிபிஐ

May 16, 2019 4:17 PM

போபர்ஸ் ஊழல் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் அளித்த மனுவை சிபிஐ திரும்பப் பெற்றது.

ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கும் ஒப்பந்தத்தில் 64 கோடி ரூபாய் அளவுக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் முறைகேடாக ஆதாயம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து 2005ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ அப்போது மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில் வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. ஆனால் அந்த மனுவை தற்போது சிபிஐ திரும்பப் பெற்றுள்ளது.