​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க அதிரடி - சீனா பதிலடி

Published : May 16, 2019 3:37 PM



அமெரிக்க அதிரடி - சீனா பதிலடி

May 16, 2019 3:37 PM

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களோடு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க குழு, பெய்ஜிங் வருவதாக, எந்த தகவலும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 விழுக்காடு அளவிற்கு வரிகளை உயர்த்தி, அமெரிக்கா நடைமுறைப்படுத்தியது.

இதற்கு பதிலடியாக, வருகிற ஜூன் மாதம் முதல்,  60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 5 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும் என சீனா அறிவித்திருக்கிறது. இதனால், இரு பெரும் வல்லரசு நாடுகளிடையே, மீண்டும் வர்த்தகப் போர் மூண்டுள்ளது.

வாஷிங்டன் சென்று சீன பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தபோதே, அமெரிக்கா வரிகளை உயர்த்தி அறிவித்ததால், சீனா கடும் அதிருப்தியில் உள்ளது.

இதனை சமாளிக்கவும், அமெரிக்க பொருட்கள் மீதான சீனா வரி விதிப்பதை தடுக்கும் வகையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு, சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்க பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங் வருவது பற்றி எந்த தகவலும் இல்லை எனக் கூறியுள்ளது.