​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக எஸ்.ஐ. மீது ஒருவர் புகார்

Published : May 16, 2019 3:33 PM



தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக எஸ்.ஐ. மீது ஒருவர் புகார்

May 16, 2019 3:33 PM

கேரள அரசால் கவுரவிக்கப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளரைக் குறிப்பிட்டு, தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக ஒருவர் வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அழுது கொண்டே பேசும் நபர், களியக்காவிளை உதவி ஆய்வாளர் மோகன அய்யர் மீது சரமாரியாக குற்றம்சாட்டுகிறார். தனது மனைவியுடன் மோகன அய்யர் தகாத உறவு வைத்திருப்பதாகவும் தன்னை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

இதுபற்றி கன்னியாகுமரி எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி ஆய்வாளர், சபரிமலை போராட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக அம்மாநில அரசால் கவுரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.