​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொத்தடிமைகளாக இருந்த 5 சிறார்கள் உட்பட 54 பேர் மீட்பு

Published : May 16, 2019 3:28 PM

கொத்தடிமைகளாக இருந்த 5 சிறார்கள் உட்பட 54 பேர் மீட்பு

May 16, 2019 3:28 PM

கும்பகோணம் அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 54 பேரை அதிகாரிகள் மீட்டனர். கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தேவன்குடி கிராமத்தில் சேகர், ராஜு ஆகிய இருவர் இணைந்து செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

இங்கு அரியலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் கொத்தடிமைகளாக இருப்பதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி தலைமையிலான அதிகாரிகள் செங்கல் சூளையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கொத்தடிமைகளாக இருந்த 5 சிறார்கள் உட்பட 54 பேரை மீட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுமார் 15 ஆண்டுகளாக அனைவரும் கொத்தடிமைகளாக பணிபுரிந்ததும், உரிமையாளர்களின் சித்ரவதை தாளாமல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள் சேகர், ராஜு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி தெரிவித்தார்.