​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் கட்டிடடம் இடிந்து விழுந்து விபத்து

Published : May 16, 2019 3:00 PM

சீனாவில் கட்டிடடம் இடிந்து விழுந்து விபத்து

May 16, 2019 3:00 PM

சீனாவில் கட்டடம்  இடிந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கிய 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஷாங்காய் சான்னிங்((changning)) மாவட்டத்தில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றை சீரமைக்கும் பணியில் 20 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.  காலையில் இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றி 11 பேரை மீட்டனர்.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால், அவர்களை தேடும் பணியில் 150க்கு மேற்பட்ட மீட்புகுழுவினர் ஈடுபட்டுள்ளனர்.