​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்

Published : May 16, 2019 1:27 PM

கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்

May 16, 2019 1:27 PM

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூட கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவின் அலபாமா மாகாண செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதான வாக்கெடுப்பின் போது 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சட்டமான பின்னர், சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணங்களின்றி கருக்கலைப்பு செய்யும் மருத்துவருக்கு 10 முதல் 99 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

சிசு அல்லது தாயின் உயிருக்கு ஆபத்து  என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமானால் கூட கருக்கலைப்பு செய்ய முடியாது.